விபத்தில் காயமடைந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் சிசிச்சை பலனின்றி உயிரிழப்பு....
மட்டக்களப்பில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து கண்டி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிசிச்சை பெற்று வந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் இன்று (23) அதிகாலை உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை (17) மட்டக்களப்பு தலைமை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எல்லை வீதியில் இடம்பெற்றது. இவ்விபத்தில் படுகாயமடைந்த அபிவிருத்தி உத்தியோகஸ்தர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிசிச்சைக்காக அனுப்பப்பட்டு அங்கு சிசிச்சை பெற்று வந்தவரே இவ்வாறு சிசிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தில் அபிவிருத்தி உத்தியோகஸ்தராக கடமையாற்றி வருகின்றவரும், மட்டக்களப்பு எல்லை வீதியில் வசிப்பவருமான தர்ஷினி மணாளன் (வயது-45) எனும் மூன்று பிள்ளைகளின் தாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமைப் பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
Comments
Post a Comment