நலன்புரி நன்மைகள் கணக்கெடுப்பில் தவறான தகவல் கொடுத்தால் வழக்கு......
நலன்புரி நன்மைகளை பெற தகுதியானவர்களைக் கண்டறிந்து கணக்கெடுப்பு நடத்தும் நடவடிக்கை எதிர்வரும் மார்ச் 31-ஆம் திகதியுடன் முடிவடைவதால், அதற்கு முன் சரியான தகவல்களை வழங்குமாறும் இல்லையெனில் நலன்புரி நன்மைகளை இழக்க நேரிடும் என்றும் நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்தார்.
இதனிடையே, கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு சிலர் தவறான தகவல்களை வழங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவ்வாறு தவறான தகவல்களை வழங்குபவர்களுக்கு சமூக நலத்திட்ட உதவிகள் கிடைக்காது எனவும் அவர்களுக்கு எதிராக நீதிமன்றம் சென்று சட்டத்தை அமுல்படுத்தப்படும் என தெரிவித்தார்.
Comments
Post a Comment