மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்டவர்களுக்கு மீன்பிடி தோணிகள் வழங்கி வைப்பு-Battieye.blogspot.com

 மீன்பிடியை ஜீவனோபாயமாக கொண்டவர்களுக்கு மீன்பிடி தோணிகள் வழங்கி வைப்பு-Battieye.blogspot.com

கிராமத்துடன் உரையாடல் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினுடாக இராஜாங்க அமைச்சரும் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுத் தலைவருமான சி.சந்திரகாந்தன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீன் பிடி தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்காக மீன்பிடி தோணிகள் வழங்கிவைக்கப்பட்டது.
கிராமத்துடன் உரையாடல் தேசிய நிகழ்ச்சி திட்டத்தினுடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 227 தோணிகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் மண்முனை வடக்கு பிரதேச செயலக பிரிவினுள் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு 48 தோணிகள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இதன் இரண்டாம் கட்டமாக (09) திகதி பெறுமதி மிக்க வாவி தோணிகளும், கடல் தோணிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஒருங்கிணைப்பு குழு தலைவரின் தனிப்பட்ட செயளாலர் த.தஜிவரன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஏ.சுதர்ஷன், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சரின் ஊடக செயலாளர் எம்.லிசோத்மன், மண்முனை வடக்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.


Comments