கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தில் முதியோருக்கான வீடு கையளிப்பு-Battieye.blogspot.com
மட்டக்களப்பு மாவட்டத்தின் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்திற்குட்பட்ட தியாவட்டவான் கிராமத்தில் முதியோருக்கான வீடு (13)ம் திகதி பிரதேச செயலாளரினால் உத்தியோகபூர்வமாக உரிய பயனாளிக்கு கையளிக்கப்பட்டது.
இவ்வீடு கையளிப்பு இந்நிகழ்வின் போது முதியோரின் நலன்களைப் பேணுவதில் சகலரும் முன்னின்று செயற்படுவதற்கான அவசியம் பற்றி கலந்துரையாடப்பட்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இத்திட்டத்தில் பின்வரும் தகமையுடையோர் உள்வாங்கப்படுகின்றனர் அவர்கள் 60 வயதிற்கு மேற்பட்டவராகவும், மாதாந்தம் 6,000 ரூபா விற்கு குறைந்த வருமானம் பெறுபவராகவும் இருத்தல் வேண்டும். இதன் ஊடாக முதியோர்களுக்காக புதிதாக வீடு நிர்மாணித்தல் அல்லது புதுப்பித்தலுக்காக சமூக பாதுகாப்பு நிதியிலிருந்து அதற்கான நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றது. அதற்கிணங்க கையளிக்கப்பட்ட இவ்வீட்டிற்கு 5 இலட்சம் ரூபா நிதி தேசிய முதியோர் செயலகத்தினால் செலவிடப்பட்டுள்ளது.
முதியோர் நல்வாழ்வினை உறுதிப்படுத்தும் வகையில் முதியோருக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தினால் அமைத்துக் கொடுக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கோரளைப்பற்று மத்தி பிரதேச செயலகத்தின் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், உதவிப் பிரதேச செயலாளர், முதியோர் உரிமைகள் மேம்பாட்டு, சமூக சேவைகள் உத்தியோகத்தர், பொருளாதார உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் தியாவட்டவான் கிராம சேவை அலுவலர் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment