சேதனை பசளையின் மூலம் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் கால் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்கல்-Battieye.blogspot.com

 சேதனை பசளையின் மூலம் விவசாய நடவடிக்கையில் ஈடுபடும் கால் இழந்தவர்களுக்கு செயற்கைக்கால் வழங்கல்-Battieye.blogspot.com

கிழக்கு மாகாணத்தில் சேதனை பசளையின் மூலம் விவசாய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்ற கால் இழந்தவர்களுக்கான செயற்கைக்கால் வழங்கும் நிகழ்வானது மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா தலைமையில் (09) திகதி இடம் பெற்றது.
அவூஸ்ரெலியன் அயிட் (Australian Aid) நிருவனத்தின் நிதி அனுசரனையில் சென்டர் போர் கன் டிக்கப் (Centre for Handicapped) ஊடாக பயனாளிகளுக்கான செயற்கை கால்கள் அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜாவினால் வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு செயற்கைக்கால்கள் வழங்கிவைக்கப்பட்டது. ஒவ்வொரு மாவட்டத்துக்கும் தலா 35 பேர் வீதம் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கத்தகும்.
மேலும் இவர்களின் வாழ்வாதாரத்தினை முன்னேற்றுவதனை நோக்காக கொண்டு இத்திட்டத்தினுடாக விவசாயத்தினை சிறப்பாக மேற்கொள்வதற்காக அவர்களினால் கோரப்பட்ட விவசாய உபகரணங்களை வழங்குவதற்கான நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் இதன் போது தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், மாவட்ட சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.அருன்மொழி, Centre for Handicapped நிறுவகத்தின் மாவட்ட இணைப்பாளர் செல்லையா ரவீந்திரன் மற்றும் நிறுவகத்தின் உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக அதிகாரிகள், பயனாளிகள் கலந்து கொண்டனர்.

Comments