சமுர்த்தி துரித பயிர்ச்செய்கை மரவள்ளி அறுவடை நிகழ்வு-Battieye.blogspot.com
மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேச செயலகத்தின் குருக்கள்மடம் வடக்கு சமுதாய அடிப்படை அமைப்பினால் நடப்பட்ட மரவள்ளி பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரத்னம் அவர்களின் வழிகாட்டலில், உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரனிதரன் அவர்களின் ஒத்துழைப்புடன், முகாமைத்துவப் பணிப்பாளர் கே.உதயகுமார் அவர்களின் தலைமையில் (10)ம் திகதி அறுவடை செய்யப்பட்டது.
இந் நிகழ்வில் கருத்திட்ட முகாமையாளர் சோ.தமிழ்வாணி, மாங்காடு சமுர்த்தி வங்கி முகாமையாளர் எஸ்.ஆனந்தமோகன், சமூக அபிவிருத்தி உதவியாளர் தெ.உதயசுதன், வலய உதவியாளர் கா.உதயகுமார், சமுதாய அடிப்படை அமைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் பி.ஜசோபனா, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் வாசுகி நிரஞ்சன் ஜீவகுமார், சமுதாய அடிப்படை அமைப்பு உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் துரித பயிர்ச் செய்கை வேலைத்திட்டத்தின் கீழ் சமுதாய அடிப்படை அமைப்பினால் கடந்த வருடம் மரவள்ளி நடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment