தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள்.....

 தொழிற்சங்க நடவடிக்கைக்கு தயாராகும் சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள்.....

அகில இலங்கை சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகளின் சங்கம் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தயாராகியுள்ளன.

சமுர்த்தி நலன்புரித் திட்டங்களில் திருத்தங்களை மேற்கொண்டமைக்கு எதிராக இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.

சமூக நலன்புரி திணைக்களத்தினூடாக மறுசீரமைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையூடாக தேவையற்ற செலவுகள் ஏற்படுவதாக சமுர்த்தி அபிவிருத்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் அநுர பண்டார ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

தகவல்களை புதுப்பிக்கும் செயற்பாடுகளில் ஈடுபடவுள்ள அதிகாரிகளுக்கு மாத்திரம் சுமார் 116 கோடி ரூபா செலவாகும். இந்நிலையில், இந்த பணத்தை பயனாளர்களுக்கு வழங்குமாறும், அரசியல் தேவைகளுக்காக போலியான விடயங்களை செயற்படுத்த முயற்சிக்க வேண்டாம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Comments