மட்டு. வந்தாறுமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்குவைப்பு:Battieye.blogspot.com

 மட்டு. வந்தாறுமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்குவைப்பு:Battieye.blogspot.com

மட்டக்களப்பு ஏறாவூர்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட வந்தாறுமூலையில் இலவச மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வு வந்தாறுமூலை அம்பலத்தடி வாசிகசாலை கட்டடத்தில் (05) திகதி நடைபெற்றது .
வந்தாறுமூலை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில் RT விஷன் உடன் கிழக்கின் கரங்கள் இணைந்து நடாத்திய குறித்த நிகழ்வில் குறும்பார்வை குறைபாடு உடைய சுமார் 70பேர் இலவச மூக்குக் கண்ணாடியை பெற்றுக்கொண்டனர்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் பல சமூக பணிகளை முன்னெடுத்து வருகின்ற குறித்த நிறுவனம் கண்பார்வை குறைபாடுள்ளவர்களை இனங்கண்டு அவர்களுக்கான கண் பரிசோதனை செய்யப்பட்டு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் RT விஷன் உத்தியோகத்தர்கள், கிழக்கின் கரங்கள் அமைப்பு உறுப்பினர்கள், வந்தாறுமூலை கிழக்கு கிராம அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.



Comments