மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்......

 மாகாண விவசாய திணைக்களத்திற்கு புதிய பணிப்பாளர்......

அம்பாறை மாவட்டம் மருதமுனையை சேர்ந்த எம்.எஸ்.ஏ.காலிஸ் அவர்கள் (21) பிற்பகல் கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் மாகாண விவசாயப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டார். இவர் முன்னர் அம்பாறை மாவட்ட விவசாயப் பணிப்பாளராக கடமையாற்றியிருந்த நிலையிலையே இந்த பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.

மாகாண விவசாயப் பணிப்பாளராக இருந்த கலாநிதி மொஹமட் ஹுசைன் ஓய்வு பெற்றதன் காரணமாக அந்தப் பதவி வெற்றிடமாகவே இருந்தது. அதனை நிரப்பும் விதமாகவே அப்பதவிக்கு எம்.எஸ்.ஏ.காலிஸ் நியமிக்கப்பட்டார். இந்நிகழ்வில், மாகாண பிரதம செயலாளர் ஆர்.எம்.பி.எஸ்.ரத்நாயக்க, மாகாண விவசாய அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

Comments