காத்தான்குடியில் சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள் பயனாளிகளுக்கு கையளிப்பு-Battieye.blogspot.com

காத்தான்குடியில் சமுர்த்தி சௌபாக்கியா வீடுகள்  பயனாளிகளுக்கு கையளிப்பு-Battieye.blogspot.com

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி சௌபாக்கியா விசேட வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட மூன்று வீடுகள் (09)ம் திகதி பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.

காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதய ஸ்ரீதர் தலைமையில் நிகழ்வு இடம்பெற்றது. சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக வழங்கப்பட்ட  6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியிலும், காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் நிதி உதவியுடனும் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டன.

இன் நிகழ்வின் போது சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புகளினால் தெரிவு செய்யப்பட்ட வறிய குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியான உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டன.

இன் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன், காத்தான்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.எஸ்.சில்மியா, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன கூட்டு சகாத் திட்டத்தின் தலைவர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Comments