A/L பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு.....

A/L பரீட்சை பெறுபேறு தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு.....

2022 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்த்தரப் பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதில் காலத்தாமதம் ஏற்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

பாராளுமன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். ஆசிரியர்களினால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக விடைத்தாள் மதிப்பீட்டு பணிகள் காலத்தாமதத்துடன் இடம்பெறுகின்றது.

இதனாலேயே பெறுபேறுகளை உரிய திகதியில் வெளியிட முடியாத நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சர் தெரிவித்தார். அத்துடன் ஆசியரியர்களின் தொழிற்சங்க நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுமாயின் 2023 ஆம் கல்வியாண்டுக்கான கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்த்தரப் பரீட்சைக்கான திகதியில் மாற்றத்தை ஏற்படுத்த நேரிடும் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

உயர்த்தர பரீட்சைக்கான விடைத்தாள் திருத்தும் பணிகளுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அமைச்சரவை அங்கீகாரத்துடன் அதிகரித்துள்ள போதிலும்இ அதிகரிக்கப்பட்ட தொகையானது பற்றாக்குறையாக காணப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்து வருகின்றனர்.

Comments