66 அங்கத்தவர்களுக்கு கடன் வழங்கிய ஜயங்கேனி விபுலானந்தா RDS-Battieye.blogspot.com

 66 அங்கத்தவர்களுக்கு கடன் வழங்கிய ஜயங்கேனி விபுலானந்தா RDS-Battieye.blogspot.com

ஜயங்கேனி கிராமத்தின் விபுலானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்தால் 66 அங்கத்தவர்களுக்கு வாழ்வாதராத்தை மேம்படுத்துவதற்காக வாழ்வாதார கடன்கள் (17) அன்று செங்கலடி பிரதேச செயலக கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் N.அரசகுமார் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது.

தற்போதைய பொருளாதார நெருக்கடியில் தம் தொழில் முயற்சியை மேம்படுத்தி கொள்ளும் நோக்குடன் விபுலானந்தா கிராம அபிவிருத்தி சங்கத்திடம் கோரப்பட்ட விண்ணப்பதற்கு அமைய இக்கடன்கள் வழங்கப்பட்டன. இக்கடனானது புளக்கல் உற்பத்தி, மரக்கறி வியாபாரம், கோழிவளர்ப்பு மற்றும் தோட்ட பயிர்ச்செய்கை போன்றவற்றிக்கு வழங்கப்பட்டன ஆகக்கூடுதலாக 45000 ரூபாவும் குறைந்ததாக 10000 ரூபாவும் என மொத்தமாக 1125000 ரூபாய் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஐயங்கேனி கிராம சேவகர் K.திவாஸ்கர் அவர்களும் ஐயங்கேணி விபுலானந்தபுர கிராம அபிவிருத்தி சங்க தலைவர் குலசேகரம் கிறீஸ்டீபன், செயலாளர் ரூபஸ்ரீ விஜயகுமார் மற்றும் பொருளாளர் மேரி கௌசல்யா சிரஞ்சீவி ஆகியோர் கலந்து கொண்டனர்.







Comments