ஏறாவூர் பொதுச்சந்தையை மீள நிர்மாணிக்க கூட்டு அமைச்சரவை பத்திரம், 350 மில்லியனில் பணிகள்......
ஏறாவூர் பொதுச்சந்தை ரூபா 350 மில்லியன் செலவில் மீள நிர்மாணிக்கப்படவுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் அண்மையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெற்றன. இதில், சுற்றாடல் அமைச்சர் நஸீர் அஹமட், நகர அபிவிருத்தி அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
ஏறாவூர் பொதுச்சந்தையை மீள நிர்மாணிப்பதற்கான மதிப்பீட்டுத் தொகையை தீர்மானிப்பதற்கென, விஷேட குழுவொன்றும் இக்கலந்துரையாடலில் நியமிக்கப்பட்டது. இந்த நிதியை அமைச்சரவையின் அனுமதியுடன் பெறுவதற்கு கூட்டு அமைச்சரவைப் பத்திரமும் தயாரிக்கப்படும். நகர அபிவிருத்தி அமைச்சு மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு என்பன இணைந்து இந்த கூட்டுப் பத்திரத்தை தயாரிக்கவுள்ளனர். இதற்கிடையில் இரண்டு கீழ்மைக்குள் இது தொடர்பில் அமைச்சர் பிரசன்ன ரணத்துங்கவுடன் அறிக்கை ஒன்றை கையளிப்பது எனவும் இங்கு முடிவு செய்யப்பட்டது.
பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடந்த இக்கூட்டத்தில், நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் W.S.சத்தியனந்த, அரச பொறியியல் கூட்டுத்தாபன தலைவர் ரத்ன ஸ்ரீ களுப்பகன, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரசாத் ரணவீர, பிரதிப் பணிப்பாளர் நாயகம் மஹிந்த விதாநாராட்சி, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பிரதம பொறியியலாளர் பிரியானி காரவித்த, அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் சாந்தகுமார, பொறியியலாளர் ரஸ்மி, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ரத்நாயக்க, கிழக்கு மாகாண உள்ளுராட்சி செயலாளர் முத்துபண்டா, கிழக்கு மாகாண உள்ளுராட்சி செயலாளர் மணிவண்ணன், கிழக்கு மாகாண கட்டிடம் தொடர்பான மாகாணபணிப்பாளர் சந்திரசேகர், மட்டக்களப்பு மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் பிரகாஷ், ஏறாவூர் நகரசபை செயலாளர் ஹமீம், ஏறாவூர் பிரதேச செயலக செயலாளர் ஹாரா மவ்ஜூத், மட்டக்களப்பு நகர அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் நாசர் ஆகியோரும் பங்கேற்றி இருந்தனர்.
Comments
Post a Comment