ரூபா மீண்டும் பின்வாங்கியது.. டொலர் மதிப்பு 320-340 ரூபா......
கடந்த வாரத்தில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியானது அதிகரித்த நிலையில் இந்த வாரத்தில் சில பின்னடைவுகளைச் சந்தித்துள்ளது.
இன்று (14) அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், கொள்வனவு விலை 320 ரூபாவாகவும் விற்பனை விலை 340 ரூபாவாகவும் அதிகரித்துள்ளது.
பொது மற்றும் தனியார் வங்கிகளில் இந்த வீதங்களில் டொலர்கள் மாற்றப்படுகின்றன.
Comments
Post a Comment