ஓட்டமாவடி 208B/2 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 2023 சர்வதேச மகளிர் தினம்-Battieye.blogspot.com

 ஓட்டமாவடி 208B/2 கிராம உத்தியோகத்தர் பிரிவில் 2023 சர்வதேச மகளிர் தினம்-Battieye.blogspot.com

கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச செயலக பிரிவின் ஓட்டமாவடி 208B/2 கிராம உத்தியோகத்தர் பிரிவில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு விசேட நிகழ்வு இன்று(20) இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி  பிரதேச செயலாளர்  வீ. தவராஜா அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந்நிகழ்வில் "முன்மாதிரிமிக்க குடும்பங்களை உருவாக்குவதில் மகளிரின் பங்களிப்பு" என்னும் கருப்பொருளில் ஏ.எல்.எம்.பைரூஸ் அவர்களினால் விசேட சொற்பொழிவு இடம்பெற்றதுடன் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்களின் கவிதை, பாட்டு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றது,   சிறப்பாக  சமூக அபிவிருத்திற்கு பங்களிப்பு செய்த மகளிர்கள்  கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு உதவி பிரதேச செயலாளர் எஸ்.எம்.அல் அமீன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், அபிவிருத்தி உத்தியோகத்தர்  ரி.கலாரூபி மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்கள் என பலரும் கலந்து கொண்டனர் .


















Comments