கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை 206 கிராம சேவகர் பிரிவில் மகளிர் தின நிகழ்வு-Battieye.blogspot.com
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை 206 கிராம சேவகர் பிரிவில் சர்வதேச மகளிர் தின நிகழ்வானது சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் ஏ.எல்.ஐயூப்கான் அவர்களின் தலைமையில் அல் முனீரா முன்பள்ளியில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் போதைப்பொருள் பாவனையும் தற்கால சமூகமும் என்ற தலைப்பில் கல்குடா ஜம்மியதுல் தஃவதில் இஸ்லாமியா அமைப்பின் தலைவர் ஏ.எல் .பீர்முகம்மட் அவர்களின் உரையில் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமுர்த்தி தலைமை முகாமையாளர் எஸ்.ஏ.எம்.பசீர், பிரிவின் சமுர்த்தி உத்தியோகத்தர் யூ.ரெஜித்தா சமுர்த்தி சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment