சர்வதேச மகளிர் தினம்-2023 'அவள் தேசத்தின் பெருமைக்குரியவள்' ஏறாவூர் பற்றில்....
சர்வதேச மகளிர் தின நிகழ்வானது ஏறாவூர் பற்றில் பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் அவர்களின் தலைமையில் வந்தாறுமூலை கலாசார மண்டபத்தில் (09) நடைபெற்றது.
இந் நிகழ்வின் போது மகளிர் சங்க உறுப்பினர்களின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றதோடு அவர்களுக்கான பரிசில்களும், சிறந்த மகளிர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் இடம்பெற்றது.
அத்தோடு சுயதொழில் முயற்சியினை ஊக்குவிக்கும் முகமாக ஐந்து பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு தலா 10,000/= ரூபா வீதம் 50,000/= ரூபா சுழற்சிமுறைக் கடனும், நலிவுற்ற எட்டு குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களும் வழங்கப்பட்டதுடன், காலம் கடந்த திருமணப் பதிவுகள் இரு தம்பதியினருக்கும், சிறந்த மகளிர் சங்க உறுப்பினர்களாக தெரிவு செய்யப்பட்ட மகளிருக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்களும் மற்றும் பிரதம அதிதி உட்பட ஐந்து பெண்களுக்கு சிறந்த மகளிருக்கான கௌரவிப்பும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் சடத்தரணி மயூரி ஜனன், உதவி பிரதேச செயலாளர் நிருபா பிரிந்தன், கணக்காளர் A.டிலானி, நிருவாக உத்தியோகத்தர் செல்வி.N.கோமதி, மேலதிக பதிவாளர் A.புனிதவதி, கிராம நிருவாக உத்தியோகத்தர் T.லிங்கேஸ்வரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.இராசலிங்கம், சமூக சேவை உத்தியோகத்தர் P..B.மலேஸ்வரன், மகளிர் அபிவிருத்தி உத்தியோகத்தர் பிரதீபா நெல்சன், சேர்கிள் நிறுவன முகாமையாளர் அஜானி காசிநாதர், சிவில் அமையத்தின் இணைப்பாளர் .சு.ரமேஸ், மாவட்ட பெண்கள் அதிகாரசபை உத்தியோகத்தர் ம.லெட்சுமி, பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், RDS தலைவர்கள் மற்றும் மகளிர் சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment