மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2023:Battieye.blogspot.com

 மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா மகளீர் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி - 2023:Battieye.blogspot.com

மட்டக்களப்பு கல்லடி உப்போடை விவேகானந்தா கல்லூரியின் 2023ஆம் ஆண்டுக்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி கல்லடி சிவானந்தா தேசிய பாடசாலை மைதானத்தில் இடம்பெற்றது.
கல்லடி விவேகானந்தா கல்லூரி அதிபர் நவகீதா தர்மசீலன் தலைமையில் நடைபெற்ற இவ்விளையாட்டுப் போட்டியில், ஆன்மீக அதிதியாக மட்டக்களப்பு கல்லடி ஸ்ரீ இராமகிருஷ்ணமிஷன் முகாமையாளர் சுவாமி நீலமாதவானந்தா ஜீ மகராஜூம், பிரதம அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமாரும், சிறப்பு அதிதிகளாக மட்டக்களப்பு வலயப் பிரதிக் கல்விப் பணிப்பாளர் கே.ஹரிகரராஜ், மட்டக்களப்பு மண்முனை வடக்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.ரவிச்சந்திரா மற்றும் மட்டக்களப்பு கல்வி வலய விளையாட்டுக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் வி.லவக்குமார் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
விளையாட்டு போட்டியில் சாரதா இல்லம் 693 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தையும், நிவேதிதா இல்லம் 674 புள்ளிகளைப் பெற்று இரண்டாம் இடத்தையும், அபவாமினி இல்லம் 597 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டன.
இப்போட்டிகளில் இடம் பெற்ற அணிநடை, உடற்பயிற்சிக் கண்காட்சி, பேண்ட் வாத்தியம் ஆகியன அனைவரதும் கவனத்தை ஈர்த்தன. இதன் போது பிரதேச பொது மக்களும் , பாடசாலை மாணவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.













Comments