மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் - 2023

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் - 2023

மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் வேலைத்திட்டம் (26) ஆம் திகதி  மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்தது. குறித்த வேலைத்திட்டத்தின் கீழ் 9301 குடும்பங்களுக்கு மாதமொன்றுக்கு தலா 10KG அரிசி வீதம் 3ம் மற்றும் 4ம் மாதங்களுக்கான அரிசி வழங்கி வைக்கப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  ளு.புவனேந்திரன், மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் M.ஜெயசந்திரன், தாளங்குடா வலய சமுர்த்தி முகாமையாளர்  U,சம்சுதீன், கிரான்குளம் தெற்கு கிராம உத்தியோகத்தர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் பயனாளிகள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது











Comments