சௌபாக்கியா விசேட வீட்டுத்திட்டம் மற்றும் சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு - 2023

சௌபாக்கியா விசேட வீட்டுத்திட்டம் மற்றும் சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு - 2023

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மண்முனைப்பற்று பிரதேச செயலகப் பிரிவில் சௌபாக்கியா விசேட வீட்டுத்திட்டம் மற்றும் சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டங்களை பயனாளிகளுக்கு கையளிக்கும் நிகழ்வு மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர்  S.புவனேந்திரன், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர் P.கலைவாணி, மண்முனைப்பற்று பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.ஜெயசந்திரன், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் S.F.R.பரீட். சமுர்த்தி முகாமையாளர்கள். சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்ததுடன் சௌபாக்கியா விசேட வீட்டுத்திட்டம் மற்றும் சமுர்த்தி லொத்தர் வீட்டுத்திட்டங்கள் புதுக்குடியிருப்பு. இராஜதுரைக்கிராமம் மற்றும் செல்வாநகர் கிழக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளைச் சேர்ந்த பயனாளிகளுக்கு கையளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.









Comments