மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - 2023-Battieye.blogspot.com
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப்போட்டி - 2023-Battieye.blogspot.com
மட்டக்களப்பு புனித சிசிலியா பெண்கள் தேசிய கல்லூரியின் 2023 ஆம் ஆண்டிற்கான இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி (20) திகதி கல்லூரியின் அதிபர் அருட்சகோதரி நிதாஞ்சலி தலைமையில் வெபர் மைதானத்தில இடம்பெற்றது.
இந்நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் வல்லிபுரம் கனகசிங்கம் கலந்து சிறப்பித்ததுடன், குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக மட்டக்களப்பு வலயக் கல்விப் பணிப்பாளர் சுஜாத்தா குலேந்திரகுமார் அவர்களும், கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு வலயக்கல்வி பணிமனையின் விளையாட்டிற்கான உடற்கல்வி பிரதிப் பணிப்பாளர் வி.லவக்குமார், கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உடற்கல்வி பணிப்பாளர் ஆர்.ஏ.புவனசிங்கம் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.
பேண்ட் வாத்திய அணிவகுப்புடன் அதிதிகள் வரவேற்கப்பட்டதனைத் தொடர்ந்து இல்ல ரீதியான அணிநடை மற்றும் உடற்பயிற்சிக் கண்காட்சி என்பவற்றுடன், மெய்வல்லுனர் போட்டிகள் ஆரம்பமாகியது, போட்டிகளில் வெற்றியீட்டிய வீராங்கனைகளுக்கான பிரிசில்களும் சான்றிதழ்களும் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது பாடசாலையின் ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலையின் பழைய மாணவிகள், மாணவிகளின் பெற்றோர்கள், மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Comments
Post a Comment