சிவானந்தாவில் 2022 மாணவர்களால் சிரமதானம்-Battieye.blogspot.com
2022ம் ஆண்டு உயர்தர பரீட்சையில் தோற்றிய மாணவர்கள் தங்கள் கல்விகற்ற பாடசாலைக்கு மனநிறைவுடன் சிரமதான பணி செய்து நன்றியை தெரிவித்துள்ளனர்.
சிவானந்தா பாடசாலையில் வெற்றிகரமான இந்நிகழ்வினை 2022ம் ஆண்டில் உயர்தர பரீட்சை எழுதிய மாணவர்களினால் முன் எடுக்கப்பட்டது. பரீட்சை எழுதியதுடன் உடனடியாக ஒன்று சேர்ந்து இந்த சிரமதான பணியை விரைவாக முன் எடுத்தது இது முதல் முறையாகும்.
அதேவேளை இந்த சிரமதான நிகழ்வை பாடசாலை அதிபர் K.சுவர்னேஸ்வரன் அவர்கள் ஏற்பாடு செய்து இருந்தார், சிரமதான நிகழ்வில் பிரதி அதிபர் A.தயாபரன் அவர்களும், சிவானந்தா பழைய மாணவர் சங்க தலைவர் V.வாசுதேவன் அவர்களுக்கும், ஆசிரியர்கள், பெற்றோர்கள், சாரண மாணவர்கள், மாணவர் படையணி, பழைய சாரணர் மாணவர் சங்க உறுப்பினர்கள், சிவானந்த பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment