கோலாகலமாக நிறைவுக்கு வந்த VMD T/10 தொடர்: எக்கோ விளையாட்டு கழகம் சம்பியன்...

 கோலாகலமாக நிறைவுக்கு வந்த VMD T/10 தொடர்: எக்கோ விளையாட்டு கழகம் சம்பியன்...

கடந்த 11ம் திகதி ஆரம்பமான  VMD T/10 தொடர் மிககோலாகலமாக முடிவுக்கு வந்தது. இத்தொடரின் சம்பியனாக சந்திவெளி எக்கொ விளையாட்டு கழகம் தெரிவாகி வெற்றிக்கிண்ணத்தை தனதாக்கி கொண்டது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அமையப் பெற்ற KSV புற்தரை  மைதானத்தில் முதல் தடவையாக நடைபெற்ற இந்த VMD T/10 தொடரில் 08 கழகங்கள் மோதிக் கொண்டன. இதில் இறுதிப்போட்டிக்கு மட்டக்களப்பு கோட்டைமுனை விளையாட்டு கழகமும் சந்திவெளி எக்கோ விளையாட்டு கழகமும் மோதிக் கொண்டன. இதில் முதலில் துடுப்பெடத்தாடிய கோட்டைமுனை விளையாட்டு கழகம் 66 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள இந்த ஓட்ட எண்ணிக்கையை மிக சுலபமாக சந்திவெளி எக்கொ விளையாட்டு கழகம் பெற்று வெற்றியை தனதாக்கி கொண்டது. மூன்றாவது இடத்தினை சிவானந்தா விளையாட்டு கழகம் பெற்றுக் கொண்டது. தொடர் ஆட்டக்காரராக கோட்டைமுனை விளையாட்டு கழகத்தின் மிதுன் அவர்களுக்கும் சிறப்பாட்டக்காரராக சந்திவெளி எக்கோ விளையாட்டு கழகத்தின்  விஜயதாசனும் பெற்றுக் கொண்டனர்.

 இந்நிகழ்வுக்கு மட்டக்களப்பு மாவட்ட அரச அதிபர் கலாமதி பத்மராஜா அவர்கள் பிரதம அதிதயாக கலந்து கொண்டார். சிறப்பு விருந்தினர்களாக மண்முனை வடக்க பிரதேச செயலாளர் V.வாசுதேவன் அவர்களும், மட்டக்களப்பு சிறைச்சாலை உதவி அத்தியேட்சகர் N.பிரபாகரன் அவர்களும், விசேட விருந்தினர்களாக பார்வையற்றோர் தேசிய கிரிக்கெட் வீரரரான உதயம் விழிப்புனர்வற்றோர் உறுப்பினரான T.மோகன்ராஜ் அவர்களும் VMD நிறுவனத்தின் ஸ்தாபகர் சண்முகம் காசிப்பிள்ளை அவர்களும் VMD நிறுவனத்தின் உரிமையாளர் காசிப்பிள்ளை சதீசன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் பணிப்பாளர்களான E.சிவநாதன், S.ரஞ்சன், S.அருள்மொழி கோட்டைமுனை விளையாட்டு கிராமத்தின் ஆயுள்கால அங்கத்தவர்களான R.உமாபதி பீட்ஜேசப், S.யேசுராஜா, ஆகியோரும் கோட்டைமுனை விளையாட்ட கிராமத்தின் செயலாளர் V.வசந்தமோகன், பொருளாளர் G.கிருஸ்ணராஜாஜி ஆகியோரும் கலந்து கொண்டனர்.













Comments