மட்டக்களப்பு EPP அக்கடமி கொழும்பு மாவட்ட கிரிக்கெட் வீரர்களுக்கு நிகராக விளையாடினர்- மதிராஜ்....
மட்டக்களப்பில் இயையோர் கடின பந்து கிரிக்கெட் விளையாட்டை மேம்படுத்தும் நோக்குடன் மட்டக்களப்பில் உருவாக்கப்பட்ட ஒரு கிரிக்கெட் அக்கடமி தான் EPP அக்கடமி. இவ்வக்கடமி பல இடையூறுகளை சந்தித்து பல சவால்களை சந்தித்து, இன்று மட்டக்களப்பில் வளர்ந்து வரும் வீரர்களை இனங்காட்டி வருகின்றது. இவ்வணியானது அன்மையில் கொழும்பில் 15 வயதிற்குட்பட்டோருக்கான ஒரு கிரிக்கெட் தொடரை சந்தித்தது. இதற்கு பயிற்றுவிப்பாளராக செயற்பட்ட மதிராஜ் அவர்கள் தன் அனுபவத்தை இப்படி எம்டடன் பகிர்ந்து கொண்டார்.இப்பயணமானது எமக்கு பல பாடங்களையும், அனுபவங்களையும் கற்றுக்கொடுத்தது என்றே கூறலாம். கிரிபத்கொட மிலேனியம் ஸ்டார் கிரிக்கெட் அகடமியின் 20/20 கடினபந்து பிரிமியர் லீக் தொடர்-2023 தொடர் பல சுவாரஸ்சியமான சம்பவங்களை எமக்கு கற்றுத்ததந்துள்ளது. கொழும்பில் நடைபெற்ற இத் தொடரில் எமது மட்டக்களப்பு EPP கிரிக்கெட் அகடமியின் 15 வயதிற்குட்பட்ட வீரர்கள் மிக மகிழ்ச்சியுடன் பங்குபற்றியிருந்தார்கள். முதல் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தை விட்டு வெளி மாவட்டத்தில் ஒரு கிரிக்கெட் போட்டி தொடரில் பங்குபற்ற எமது EPP அக்கடமி சென்றிருந்தது. இப் போட்டியில் 04 அணிகள் பங்குபற்றி இருந்தது, ஆனால் எமது வீரர்கள் ஒரு போட்டியில் வெற்றி பெற்றாலும் தனிநபர் ஆட்டங்கள் பாராட்டத்தக்க ஆட்டங்களாகவே இருந்தது
இதில் குறிப்பாக நான் கூறுவதாயின் கொழும்பு மாவட்ட வீரர்களுக்கு நிகராக எமது வீரர்கள் தம் திறமைகளை வெளிக்காட்டியிருந்தனர் என்றே கூறலாம். குறிப்பாக துடுப்பாட்டத்தில் நிருக்சன் 73,49*,30 ஓட்டங்களையும், அணித்தலைவர் சாருக்சன் 60,30,30 ஓட்டங்களையும், சிவஹரிஸ் 35,32,30 ஓட்டங்களை பெற்று தம் துடுப்பாட்டத்தை நிருபித்து நின்றனர்.
பந்துவீச்சில் சுஜிதரன் 6 விக்கெட்டுகளையும், களத்தடுப்பில் கினோஜன் சிறந்த 3 பிடியெடுப்புகளையும் எடுத்து சாதனை படைத்துள்ளனர். மற்றும் வளர்ந்துவரும் ஆங்கில வர்ணனையாளரான வராகீசன் தன் ஆங்கில புலமையை செயற்படுத்தி இருந்தார். இவ் அரிய வாய்ப்பை ஏற்படுத்தி தந்து பல உதவிகளையும் செய்து தந்த மல்வானை கிரிக்கெட் அகடமியின் தலைமை பயிற்றுவிப்பாளர் மொஹமட் ரமலி அவர்களுக்கு EPP அக்கடமி சார்பாக எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
ஒன்றை மட்டும் நான் உறுதியாக கூறுகின்றேன் எமது வீரர்களின் உயர்வு வெகு தொலைவில் இல்லை என்று கூறி இருந்தார்.
Comments
Post a Comment