கிழக்கு மாகாண சதுரங்க போட்டியில் மட்டக்களப்பு பாடசாலைகள் சாதனை: Battieye.blogspot.com
இலங்கை பாடசாலைகள் சதுரங்க சங்கம் நடாத்திய 2022ம் ஆண்டுக்கான கிழக்கு மாகாண சதுரங்க போட்டியில் மட்டக்களப்பு மாவட்ட பாடசாலைகள் சாதனை படைத்துள்ளன. இதில் மட்டக்களப்பு மிக்கல் கல்லூரி 15 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் முதலாமிடத்தினையும், 13 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் இரண்டாமிடத்தினையும், 17 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் நான்காமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இதே போல் மட்டக்களப்பு வின்சன்ட் உயாதர பாடசாலை 13 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் முதலாமிடத்தினையும், 17 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் முதலாமிடத்தினையும் பெற்று சாதனை படைத்துள்ளது.
இத்துடன் புனித சிசிலியா பெண்கள் பாடசாலை 11 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் முதலாமிடத்தினையும், 13 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் மூன்றாமிடத்தினையும், 15 வயதிற்குட்பட்டோருக்கான போட்டியில் மூன்றாமிடத்தினையும், 09 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் ஜந்தாமிடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
வருடாந்தம் நடைபெற்று வரும் இச்சதுரங்க போட்டியானது கடந்த 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமானக நடைபெறவில்லை. இருந்த போதிலும் இம்முறை நடைபெற்ற இச்சதுரங்க போட்டியில் மட்டக்களப்பு பாடசாலைகள் வெற்றி பெற்று எதிர்வரும் ஏப்ரல் மாதம் கொழும்பில் நடைபெறவுள்ள இறுதி போட்டிக்கு இம்மாணவர்கள் தெரிவாகியுள்ளதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment