இவர்களுக்கு யார் கைகொடுப்பது?
இன்று இலங்கை அணியில் வடகிழக்கில் உள்ள தழிழ் பேசும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என பலரும் தங்கள் ஆதங்கங்களை வெளிப்படுத்திய வண்ணமே உள்ளனர். ஆனால் இலங்கை தேசிய அணியில் விளையாட வேண்டுமானால் கொழும்பில் உள்ள முதல்தர கழகங்கங்களில் விளையாட வேண்டும் அல்லது கிரிக்கெட் விளையாட்டில் Div-1 தரத்திலான பாடசாலைகளில் கல்வி பயின்று இருக்க வேண்டும். ஆனால் எம்மவர் இங்கிருந்து சாதனை படைப்பதில் எந்தவித பயனுமல்ல என்றே கூறலாம் ஏன் என்றால் இதுவே இலங்கை கிரிக்கெட்டின் ஏழுதப்படாத யாப்பாகும்.
அன்மையில் மட்டக்களப்பில் நடந்த ஒரு சம்பவத்தை பதிவிட ஆசைப்படுகின்றேன். மட்டக்களப்பு ஏறாவூர் அறபா பாடசாலையின் மாணவர்கள் Div-3 பாடசாலை போட்டிகளில் பங்குபற்றி இறுதிப்போட்டிக்கு தெரிவாகி இரண்டாமிடத்தை பெற்றுக் கொண்டனர் அவர்களால் Div-2 பிரிவுக்கு செல்ல முடியவில்லை. இவர்கள் இப்போட்டியில் பங்குபற்றியது மட்டக்களப்பிற்கு மாத்திரம் பெருமையல்ல கிழக்கு மாகானத்திற்கே ஒரு பெருமையான விடயமாக இருந்தது ஏன் என்றால் மட்டக்களப்பு மற்றும் திருகோணமலையில் எத்தனையோ பிரபல பாடசாலைகள் இருந்தும் இந்த ஒரு அரிய வாய்ப்புக்கு முன்னேற முடியவில்லை இது தான் நமது முடியாமையாகும்.
இருந்த போதிலும் அறபா கல்லூரிக்காக விளையாடிய H.R.அகமட் அல் நகையான் மற்றும் M.N.M.பஜீஸ் போன்றோர் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள 19 வயதிற்குட்பட்ட உலக கிண்ண அணியில் விளையாட தெரிவு செய்யப்பட்ட 50 வீரர்களில் தங்கள் பெயர்களையும் உள்வாங்கும் அளவிற்கு தங்கள் திறமையை பதிவிட்டு இருந்தனர். ஆனால் இவர்கள் பல பயிற்சிக்காக கொழும்பிற்கு அழைக்கப்பட்ட போதிலும் இவர்களிடம் பல ஆட்ட நுனுக்கங்கள் இவர்களுக்கு போதாமல் உள்ளதாகவும், புற்தரையிலான அனுபவம் குறைவாக உள்ளதாகவும், பந்து வீச்சு இயந்திரங்கள் மூலம் வீசப்படும் பந்துகளை இவர்கள் எதிர் கொள்வதற்கு கடினப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டதாக இவர்களின் பயிற்றுவிப்பாளர் முகமட் பாஸில் தன் கருத்துக்களை முன் வைத்தார்.
அவர் மேலும் கருத்த தெரிவிக்கையில் இவ்விரு வீரர்களும் 13 வயதில் இருந்தே தம்மிடம் பயிற்சி பெற்று வருவதாகவும் இவர்களின் திறமையை தாம் கண்டு கொண்டதாகவும் தெரிவித்து இவர்களை அடுத்த கட்டத்திற்க கொண்டு செல்ல வேண்டுமானால் இவர்கள் கொழும்பில் உள்ள ஒரு பிரபல பாடசாலையில் கல்வி கற்றால் மாத்திரமே இவர்களின் திறமை பாடசாலை மட்டத்தில் வெளிப்பட்டு கொழும்பில் உள்ள பிரபல கழகங்களில் இணைவதன் மூலம் சரா போட்டிகள், பிரிமியர் லீக் போட்டிகள் மற்றும் முதல் தரப்போட்டிகளில் விளையாட முடியும் இதன் மூலமே இவர்கள் தேசிய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டார்.
எமது மாவட்டத்தை பொறுத்தவரை கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானம் எமக்கு ஒரு வரப்பிரசாதமான மைதானமாக காணப்படுகின்றது. இம்மைதானத்தில் எம் வீரர்கள் போட்டியில் பங்குபற்ற வேண்டுமானால் வெளி மாவட்ட அணிகளை இங்கழைத்து போட்டிகளில் பங்குபற்ற வேண்டும் இதற்கு பாரிய செலவு தோவைப்படும் இருந்த போதிலும் எமது வீரர்களில் அக்கரை கொண்ட கோட்டைமுனை விளையாட்டு கிராம புற்தரை மைதானத்தின் பணிப்பாளர் நாயகம் புவனசிங்கம் வசீகரன் அவர்கள் அப்போதே எம் வீரர்களை இனம் கண்டு உதவிகளை வழங்கியதோடு இம்மைதானத்தில் எமது வீரர்கள் பயிற்சிகளை மேற் கொள்ள பூரன ஒத்துழைப்பை வழங்கியதுடன் தங்கள் பந்து வீச்சு இயந்திரத்தினையும் வழங்கி இருந்தனர். எது எப்படியோ எமது வீரர்கள் தங்கள் திறமையை இங்கு வெளிக்கொனர்தாலும் தேசிய மட்டத்தில் பேசுவதற்கான சந்தர்ப்பம் கிட்டுவது அரிதாகவே காணப்படும்.
இப்போது எனக்கிருக்கும் கவலை 13 வயதில் என்னால் முடிந்த பயிற்சிகளை வழங்கிய நான் இவர்களை வளர்த்து விட்டேன் இனி இவ்விரு வீரர்களையும் எவ்வாறு அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது என்பது தான் எனது சிந்தனை. திறமையான வீரர்தான் H.R.அகமட் அல் நகையான் ஒரு துடுப்பாட்ட சகலதுறை ஆட்டக்காரர். அதே போல் M.N.M.பஜீஸ் ஒரு பந்துவீச்சு சகலதுறை ஆட்டக்காரர் எப்படி இவர்களை கொழும்பு பாடசாலையுடன் தொடர்புபடுத்தி இவர்களின் விளையாட்டை விருத்தி செய்வது என தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
Comments
Post a Comment