காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின நிகழ்வு!!
மட்டக்களப்பு காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையம் மற்றும் அதன் பிரிவுகள் இணைந்து நடாத்திய 75வது சுதந்திர தின விழா நிலையத்தின் தாருல் அர்க்கம் வளாகத்தில் நடைபெற்றது.
இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் தலைவரும் தென் கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருமான ஏ.எம்.அலியார் ரியாதி தலைமையில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் U.உதயஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றி வைத்து நிகழ்வை சிறப்பித்திருந்தார்.
காத்தான்குடி இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்தின் முன்மாதிரி பாடசாலையில் கடமையாற்றும் ஆசிரியர்களுக்கு சான்றிதழ்களும் சுதந்திர தின நிகழ்வின் போது அதிதிகளினால் வழங்கப்பட்டன.
Comments
Post a Comment