ஏறாவூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பசுமையான இலங்கை எனும் வேலைத்திட்டம்.......

 ஏறாவூரில் சுதந்திர தினத்தை முன்னிட்டு பசுமையான இலங்கை எனும் வேலைத்திட்டம்.......

இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கி வருகின்ற ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில். 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு பசுமையான இலங்கை எனும் தொனிப்பொருளில் இம்மாதம் 03 தொடக்கம் 09 ஆம் திகதி வரை பல வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் ஏறாவூர் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட அல் முனீரா பெண்கள் பாடசாலைக்கு முன்னாள் பலவகை மரங்களும், மற்றும் கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நிழல் தரும் மரங்களும் நடப்பட்டன.
மேலும் மஹ்ஹது நஜ்மில் உலூம் அரபுக்கல்லூரி மற்றும் தைக்கா பள்ளிவாயலில் மல்லிகை மர நடுகை செயற்திட்டம் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் நகர பிரதேச இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எ.டபிள்யு.இர்சாத் அலி அவர்களின் வழிகாட்டலுக்கு ஏற்ப நடைபெற்ற இந்நிகழ்வில் இளைஞர் சேவைகள் மன்ற உத்தியோகத்தர்கள், கிராம் சேவகர், உயர் அதிகாரிகள், வர்த்தக சங்க தலைவர் மற்றும் உறுப்பினர் என பலரும் கலந்து கொண்டனர்.




Comments