சிவானந்தா விவேகானந்தா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்......

 சிவானந்தா விவேகானந்தா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் வருடாந்த ஒன்று கூடல்......

மட்டக்களப்பு கல்லடி சிவானந்தா விவேகானந்தா வித்தியாலய பழைய மாணவர் ஒன்றியத்தின் பொதுக்கூட்டமும் வருடாந்த ஒன்று கூடலும் அதன் தலைவர் கண் வைத்திய சத்திர சிகிச்சை நிபுணர் பூ.ஸ்ரீகரநாதன் தலைமையில் (12) விவேகானந்தா வித்தியாலயத்தில் நடைபெற்றது.
கடந்த காலங்களில் மேற்கொள்ளப்பட்ட வேலைத்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டதுடன், எதிர்காலங்களில் மேற்கொள்ளவுள்ள வேலைத்திட்டங்கள் குறித்தும் ஆராயப்பட்டது.
நிருவாக சபையின் செயற்குழு உறுப்பினர் தெரிவும் இடம்பெற்றது. அதில் இ. கிருசாந்தன், தி.ரொஹான் ஆகிய இருவரும் வெளிநாட்டு உறுப்பினர்களாகவும், உள்நாட்டு உறுப்பினர்களாக பே.ரவிசங்கர், நா.கிரிதரன், வ.ஜீவானந்தன் ஆகிய மூவருமாக ஐந்து பேர் தெரிவாகியுள்ளனர்.
எதிர்காலத்தில் மாணவர்களுக்கான கல்வி தொடர்பான செயல்திட்டங்கள் குறித்து ஆராயப்பட்ட போது, புதிய திட்டங்களை முன்னெடுப்பதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இதன்போது வெளிநாட்டின் சார்பில் எஸ்.நந்திகேசன் அவுஸ்ரேலியாவில் இருந்து கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
நிகழ்நிலை கலந்துரையாடல் மூலம் வெளிநாட்டு உறுப்பினர்கள் (நண்பர்கள்), கலந்து கொண்டு கருத்துரை வழங்கியிருந்தனர். இந்நிகழ்வில் செயலாளர் நா.ரகுவரன், பொருளாலர் என்.யசோதரன் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.



Comments