மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரால் மூன்று சௌபாக்கியா வீடுகள் திறந்து வைப்பு ....

 மட்டு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளரால் மூன்று சௌபாக்கியா வீடுகள் திறந்து வைப்பு ....

சமுர்த்தி அபிவிருத்தி தினைக்களாத்தின் ஊடாக சமுர்த்தி பயனுகரிகளுக்கு வருடாந்தம் பல்வேறு விதமான வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படுகின்றன. இதற்கமையை சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் ஊடாக சமுர்த்தி சௌபாக்கியா பத்து லட்சம் ரூபாய் பெறுமதியான வீடுகள் அமைத்துக் கொள்வதற்காக சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆறு லட்சத்தி ஜம்பதினாயிரம் ரூபாவை நன்கொடையாக வழங்க மீதித்தொகையை சமுர்த்தி பயனாளி இடுவதன் மூலம் இவ்வீட்டினை அமைத்துக் கொள்ள முடியும். இத்துடன் இவ்வீட்டை மேலதிகமாக வடிவமைத்துக்கொள்ள கிராமத்தில் உள்ள நலனுதவியாளர்களின் நன்மையை பெற்றும் அமைத்துக் கொள்ளமுடியும்.

அந்த வகையில் ஏறாவூர் நகர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட மீராக்கேணி 193/A எனும் கிராமத்தில் 03 சமுர்த்தி பயனாளிகளுக்கு வீடுகள் அமைக்கப்பட்டு உரியவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வானது ஏறாவூர் நகர் பிரதேச செயலாளர் நிஹாறா மௌஜூத் தலைமையில் (09)ம் திகதி நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் சிசுபாலன் புவனேந்திரன் அவர்களால் மீராக்கேணி 193/A  கிராமத்தின் வெ.த.சிமிலத்தும்மா, பி.கு.மல்லிகா உம்மா, மு.இ.முஜிபு றகுமா ஆகியோருக்கு வீடுகள் கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட சமுர்த்தி கணக்காளர் M.S.பஸீர், ஏறாவூர் நகர் உதவி பிரதேச செயலாளர்  AC.அஹமட் அக்பர், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் K.கணேசமூர்த்தி, சமுர்த்தி முகாமைத்துவப்பணிப்பாளர் M.ருமைஸ், சமுர்த்தி வங்கி முகாமையாளர்கள், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியேகத்தர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர். 











Comments