"மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன் கடமையாற்ற வேண்டும்!" - சத்தியானந்தி நமசிவாயம்

 "மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன் கடமையாற்ற வேண்டும்!" - பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் .

"நிகழ்கால பொருளாதார நிலையைக் கருத்திற் கொண்டு மக்களின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்குடன், மிகவும் காத்திரமான முறையிலே இனிவரும் காலங்களில் அலுவலக உத்தியோகத்தர்கள் சிறப்பாக கடமையாற்ற வேண்டும்" என மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச செயலகத்தில், (04) இடம்பெற்ற 75ஆவது தேசிய சுதந்திர நிகழ்வில் கலந்துகொண்டு, பிரதேச செயலாளர் சத்தியானந்தி நமசிவாயம் தனது சுதந்திர தின உரையில் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
ஒரு செயற்திட்டத்தினை ஆரம்பிப்பதை மட்டுமே நோக்கமாக கொண்டு செயற்படாது, அச்செயற்றிட்டத்தின் வெற்றிகரமான படி நிலைகளை தொடர்ந்தும் கண்காணித்து, பொறுப்புணர்வுடன் செயலாற்ற வேண்டுமென சத்தியானந்தி நமசிவாயம் குறிப்பிட்டார்.
இந்நிகழ்வின்போது தேசியக்கொடி ஏற்றப்பட்டு உத்தியோகத்தர்களால் தேசியகீதம் இசைக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.
மேலும், பிரதேச செயலகத்தில் சிரமதானப் பணி முன்னெடுக்கப்பட்டிருந்ததோடு பிரதேச செயலகத்தினால் நடாத்தப்பட்ட வீட்டுத்தோட்டம், மரநடுகை, சிரமதானப் பணி போன்றவற்றில் தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.



Comments