கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் சமுதாய அடிப்படை அமைப்பின் பொதுக்கூட்டம்..

 கோரளைப்பற்று மேற்கு பிரதேச செயலகத்தில் சமுதாய அடிப்படை அமைப்பின் பொதுக்கூட்டம்..

கோறளைப்பற்று மேற்கு (ஓட்டமாவடி) பிரதேச செயலக பிரிவின் பிரதேச சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பின் பொதுக்கூட்டம் அன்மையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. 

பிரதேச செயலாளர்  V.தவராஜா அவர்களின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், 2023ம் ஆண்டுக்கான புதிய நிர்வாகம் தெரிவு இடம்பெற்றது. இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் எம்.ஐ.ஏ.அஸீஸ், மட்டக்களப்பு மாவட்ட செயலக விடயப்பொறுப்பு முகாமையாளர் K..பகீரதன், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலக சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர் என்.விஜிதன், சமுர்த்தி சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.என்.எம்.சாஜஹான், அபிவிருத்தி உத்தியோகத்தர்களான T.கலாரூபி, எல்.கிஷானந் மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், உட்பட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்புக்களின் தலைவர்களும் கலந்து கொண்டனர். 





Comments