சமுர்த்தியின் துரித பயிர்செய்கையின் மரவெள்ளி அறுவடை நிகழ்வு களுவாஞ்சிக்குடியில் ......
துரித பயிர்செய்கை நடவடிக்கைகளை விரைவாக ஆரம்பித்தல் எனும் செயற்பாட்டில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்திற்குரிய காணிகள், பொதுக்காணிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அலுவலகங்கள் மற்றும் வீடுகளில் பயிர் செய்கை வேலைத்திட்டத்திற்கு அமைவாக மரவெள்ளி நடுகை மேற்கொள்ளப்பட்டது.இவ்வாறு பயிரிடப்பட்ட மரவள்ளி கிழங்கின் அறுவடை மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமுர்த்தி சமுதாய அடிப்படை அமைப்பு (CBO) மேற் கொண்ட பொதுக்காணியில் அறுவடை நடைபெற்றது.
இந்நிகழ்வானது மண்முனை தென் எருவில் பற்று (களுவாஞ்சிக்குடி) பிரதேச செயலாளர் சிவப்பிரியா வில்வரெட்னம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் சத்தியகௌரி தரனிதரன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் நிர்மலராஜ், சமுர்த்தி தலைமையக முகாமையாளர், சமுர்த்தி முகாமைத்துவ பணிப்பாளர், சமுர்த்தி கருத்திட்ட முகாமையாளர், சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுதாய அடிப்படை அமைப்புக்களின் (CBO) உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment