வியாபார ஊக்கப்படுத்தல் தொடர்பான செயலமர்வு....
மண்முனை வடக்கு பிரதேச செயலக சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்ட வியாபார ஊக்குவிப்பு தொடர்பான செயலமர்வு இன்று (16) பிரதேச செயலக டேபா மண்டபத்தில் இடம்பெற்றது.
இது இலங்கை பூராகவும் உள்ள சகல பிரதேச செயலகங்களிலும் ஒரே நாளில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்களும் புதிதாக வியாபாரத்தை ஆரம்பிக்க இருக்கும் தொழில் முயற்சியாளர்களும் பங்கு பற்றினர்.
இதன்போது வியாபாரத்தை ஊக்குவிக்கக்கூடிய சகல ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் வியாபாரத்தின் பலம் பலவீனங்களும் விளக்கிக் கூறப்பட்டது.
இதில் HNB வங்கியோடு தொழில் முயற்சியாளர்களை தொடர்புபடுத்தி அவர்களுக்கான கடன் வழங்கும் வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது.
Comments
Post a Comment