மின் கட்டண உயர்வு குறித்து நாளை இறுதி முடிவு.............

 மின் கட்டண உயர்வு குறித்து நாளை இறுதி முடிவு.............

மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான இறுதித் தீர்மானம் நாளை (பெப்ரவரி 15) எடுக்கப்படும் என மின்சார சபைத் தலைவர் பாராளுமன்றத்தின் தேசிய சபையில் அறிவித்துள்ளார்.

மின்சாரக் கட்டணத்தை 60% உயர்த்துமாறு மின்சார சபை கோருகிறது, அதனை நிறைவேற்றாவிட்டால் எதிர்காலத்தில் நிலக்கரியை இறக்குமதி செய்யக் கூட பணமில்லாத நிலை ஏற்படும் எனவும், அதன் விளைவாக நீண்ட மின்வெட்டை எதிர்கொள்ள நேரிடும் எனவும் மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதன்போது, ​​மின்சார சபை மற்றும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஆகிய இரு தரப்பிலும் உள்ள கருத்துக்களைப் பேசி ஒருமித்த கருத்துக்கு வந்து முடிவெடுப்பது மிகவும் முக்கியமானது எனவும், இல்லையெனில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாது எனவும் தேசிய சபை சுட்டிக்காட்டியுள்ளது.

Comments