மட்டக்களப்பில் ஹங்கேரி ப்ளாஸ்ட் நிகழ்ச்சித் திட்டம்: Battieye.blogspot.com

 மட்டக்களப்பில் ஹங்கேரி ப்ளாஸ்ட் நிகழ்ச்சித் திட்டம்: Battieye.blogspot.com

மட்டக்களப்பு, மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பிரதேச சிறு தொழில் முயற்சியாளர்களுக்கு ஊக்கமளிக்கும் "ஹங்கேரி ப்ளாஸ்ட் நிகழ்ச்சி திட்டம்" பிரதேச செயலாளர் வ. வாசுதேவன் தலைமையில் (27) நடைபெற்றது.
பிரதேச சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி உத்தியோகர்களால் ஒழுங்குபடுத்தப்பட்ட இந்நிகழ்வில், உறைப்பு, இனிப்பு சுவையிலான தின்பண்டங்கள், சோளம், நிலக்கடலை போன்ற தானிய பொருட்கள் போன்றவற்றின் தொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திகளை விற்பனை செய்வதில் ஈடுபட்டனர்.
இதில் சகல உத்தியோகத்தர்கள், பிரதேச மக்கள் என பலரும் கலந்து கொண்டு கொள்வனவை மேற்கொண்டு, தொழில் முயற்சியாளர்களை ஊக்குவித்தமை குறிப்பிடத்தக்கது.






Comments