தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது – நிமல் புஞ்சிஹேவா

 தபால் வாக்குச்சீட்டுகளை விநியோகிக்க முடியாது – நிமல் புஞ்சிஹேவா....

திட்டமிட்ட வகையில் நாளை (15) முதல் தபால் மூல வாக்களிப்புக்கான வாக்குச் சீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா, அரசியல் கட்சிகளின் பொதுச் செயலாளர்களுக்கு அறிவித்துள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவுக்கும், கட்சியின் செயலாளர்களுக்கும் இடையில் இன்று இடம் பெற்ற சந்திப்பின்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, உரிய பணம் செலுத்தப்படும் வரை வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட மாட்டாது என அரசாங்க அச்சகம் தெரிவித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தலைவர் தெரிவித்தார்.

எனவே, முன்னதாக திட்டமிட்டப்படி நாளைய தினம் வாக்குசீட்டை விநியோகிக்க முடியாதென தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திட்டமிட்டபடி நடத்தப்படும் என உயர் நீதிமன்றில் தேர்தல் ஆணைக்குழு முன்னதாக உறுதியளித்திருந்தது.

எவ்வாறாயினும், சட்டமா அதிபரிடமிருந்து தமக்கு போதிய ஆதரவு கிடைக்கவில்லை என்றும் இந்த விவகாரத்தை மீண்டும் ஒருமுறை உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு செல்வதாகவும் தேர்தல் ஆணைக்குழு தலைவர் நிமல் புஞ்சிஹேவா, கட்சிகளின் செயலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

Comments