எரிசக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை.....

 எரிசக்தி அமைச்சருக்கு ஜனாதிபதி விடுத்துள்ள பணிப்புரை.....

பொது பயன்பாடுகள் ஆணைக்குழுவின் அனுமதிக்கிணங்க மின் கட்டணம் அதிகரிக்கப்பட்டதன் பின்னர் மின் விநியோகத்தடையினை இரத்துச்செய்யுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகரவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார். ஜனாதிபதி ஊடகப்பிரிவு இதனை தெரிவித்துள்ளது.

மின்விநியோகத்தடையினை இரத்துச் செய்து பயனாளர்களுக்கு தொடர்ந்தும் மின்சாரத்தை வழங்குவதை உறுதிப்படுத்துமாறும் ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார். மேலும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குமாறும் ஜனாதிபதி தனது பணிப்புரையில் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், மத வழிபாட்டு தலங்கள் மற்றும் அரச கல்வி நிறுவனங்களுக்கு சூரிய சக்தியிலான மின்சார வசதியினை பெற்றுக்கொடுக்குமாறும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Comments