மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது தபால் மூல வாக்கெடுப்பு.....

 மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டது தபால் மூல வாக்கெடுப்பு.....

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பு மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

எதிர்வரும் மார்ச் மாதம் 9 ஆம் திகதி நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு எதிர்வரும் 22, 23, 24 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெறவிருந்த நிலையில் அது தற்போது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தபால் மூல வாக்குச் சீட்டுக்களை வழங்குவதற்கு இணக்கம் தெரிவித்திருந்த நிலையில், அரசாங்க அச்சகம் வாக்குச் சீட்டுக்களை உரிய திகதிகளில் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு வழங்காமை காரணமாக இவ்வாறு தபால் மூல வாக்களிப்பு பிற்போடப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது.

Comments