மட்டு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓர் துயரச்செய்தி.....

 மட்டு மாவட்ட சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கு ஓர் துயரச்செய்தி.....

மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுனதீவு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட புதுமண்டபத்தடி சமுர்த்தி வலயத்தில் சமுர்த்தி உதவியாளராக கடமையாற்றி சமுர்த்தி உத்தியோகத்தர் அமரர் கதிர்காமப்போடி முருகமூர்த்தி அவர்கள் இறைபதம் அடைந்தார் எனும் துயரச்செய்தியை அனைத்து சமுர்த்தி உத்தியோகத்தர்களுக்கும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பட்டிப்பளையை பிறப்பிடமாக கொண்ட இவர் தன் முதல் நியமனத்தை பட்டிப்பளை பிரதேச செயலகத்தில்  1999.11.12 ஆரம்பித்து இறுதியாக புதுமண்டபத்தடி சமுர்த்தி வலயத்தில் உதவியாளராக கடமையாற்றி இருந்தார்.

கொத்தியாபுலையை தற்போது வசிப்பிடமாக கொண்ட இவர் நான்கு பிள்ளைகளின் தந்தையாவார். இவர் சற்று நோய்வாய்பட்டே காணப்பட்ட போதிலும் தன் கடமையை சிறப்பாக செய்துவந்துள்ளார். 23.02.2023 திடீர் சுகவீனமுற்றதன் காரணமாக இவ்வுலகை விட்டு விடைபெற்றார்.

அன்னாரின் அடக்கம் பற்றி இதுவரை தகவல் அறிவிக்கப்படவில்லை ஆனால் அன்னாரின் பூதவுடல் கொத்தியாபுலையில் அன்னாரது இல்லத்தில் வைக்கபபட்டு  அடக்கம் செய்யப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Comments