அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி கற்பிப்பதற்காக மட்டக்களப்பில் இருந்து இருவர் தெரிவு.....

 அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி கற்பிப்பதற்காக மட்டக்களப்பில் இருந்து இருவர் தெரிவு.....

அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கான இரண்டாம் மொழி கற்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காக தற்போது பல பயிற்சி நெறிகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறான பயிற்சிநெறிகளை நடாத்துவதற்கான ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறி அன்மையில் நடைபெற்றது.

தேசிய மொழிக்கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தால்  களுத்துறை அகலவத்த பயிற்சி நிலயத்தில் 05 நாள் வதிவிட பயிற்சியாக நடைபெற்ற இப்பயிற்சி பாசறையில் மட்டக்களப்பை சேர்ந்த ஸ்டீபன் ஜெரால்ட் மற்றும் இளங்கோதரன் தனுஜா ஆகியோர் வெற்றிகரமாக தம் பயிற்சிகளை முடித்துள்ளனர்.

இப்பயிற்சிநெறியில் 32 பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர். இவர்களில் மட்டக்களப்பில் இருந்து 02 பேர் மாத்திரமே இப்பயிற்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும். இவர்கள் பகுதிநேர ஆசிரியர்களாக இலங்கையின் சகல பாகங்களிலும் கடமையாற்றுவர்கள் எனவும் முதல் கட்டமாக பொலநறுவை, அம்பாறை மாவட்டங்களில் தம் இரண்டாம் மொழி ஆசிரியர் பணிகளை தொடரவுள்ளனர்.

இவர்கள் இருவரும் மட்டக்களப்பு மாவட்ட செயலக சமுர்த்தி பிரிவில் கடமையாற்றுவது குறிப்பிடத்தக்க விடயமாகும்.






Comments