"நமோ நமோ மாதா-நூற்றாண்டுக்கு ஒரு படி" எனும் கருப்பொருளுக்கு இணங்க பணியாற்றுவோம் - வாழைச்சேனை பிரதேச செயலாளர் ......

"நமோ நமோ மாதா-நூற்றாண்டுக்கு ஒரு படி" எனும் கருப்பொருளுக்கு இணங்க பணியாற்றுவோம் - வாழைச்சேனை பிரதேச செயலாளர் ......

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தின் "நமோ நமோ மாதா-நூற்றாண்டுக்கு ஒரு படி" எனும் கருப்பொருளுக்கு இணங்க, நாட்டு மக்களுக்கான சேவையினை விரிவு படுத்தி பணியாற்றுவது அவசியமாகும் என தேசிய சுதந்திர தினத்தின் முக்கியத்துவம் தொடர்பாக கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற தேசிய சுதந்திர தின விழா உரையில் பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் தெரிவித்தார்.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 75 ஆவது சுதந்திர தின நிகழ்வு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் (04) பிரதேச செயலாளர் ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச செயலாளரினால் தேசியக்கொடி ஏற்றப்பட்டு, உத்தியோகத்தர்களால் தேசியகீதம் இசைக்கப்பட்டு, நாட்டுக்காக உயிர்த் தியாகம் செய்தவர்களுக்கான இரண்டு நிமிட அஞ்சலி நிகழ்த்தப்பட்டது.
இதன் போது இரத்ததான முகாமிற்கு பங்களிப்பு செய்த குருதி கொடையாளிகள், அலுவலக சூழலில் சிறப்பாக பசுமை உற்பத்தியை மேற்கொண்டவர்கள் ,அரச அலுவலர்களுக்கான இரண்டாம் மொழி(சிங்களம்) பயிற்சியினை பூர்த்தி செய்தவர்கள் ஆகியோருக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர்.
சூழல் நேய பசுமை வேலைத்திட்டத்தினை அடிப்படையாகக் கொண்டு மர நடுகையும் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் உதவிப்பிரதேச செயலாளர் அமலினி கார்த்தீபன், உதவி திட்டமிடல் பணிப்பாளர் ஆர்.கங்காதரன், கணக்காளர் ஜே.ஜோர்ச், நிருவாக உத்தியோகத்தர் ஆர்.பாஸ்கரன், மேலதிக மாவட்ட பதிவாளர் ஆர்.சசிகுமார், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் கே.தேவமனோகரி மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்

Comments