பல காய்கறிகளின் விலைகள் குறைந்தாலும் வியாபாரிகளின் வரத்து குறைவு.......

 பல காய்கறிகளின் விலைகள் குறைந்தாலும் வியாபாரிகளின் வரத்து குறைவு.......

விவசாயிகள் பொருளாதார மையங்களுக்குக் கொண்டு வரும் காய்கறிகளை வாங்க சில்லறை மற்றும் மொத்த வியாபாரிகள் இல்லாததால், அந்த மையங்களின் வர்த்தக நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

பொருளாதார மைய அதிகாரிகள் கூறுகையில், போஞ்சி, கறி மிளகாய் தவிர பல காய்கறிகளின் விலை குறைந்தாலும், காய்கறிகளை வாங்க வியாபாரிகள் வரத்து வெகுவாகக் குறைந்துள்ளது.

வாடிக்கையாளர்கள் காய்கறிகளை வாங்காததால் பல காய்கறிக் கடைகள் மூடப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.

நேற்று (16) பல வகையான காய்கறிகளின் மொத்த விற்பனை விலை பின்வருமாறு:

போஞ்சி ரூ. 280-300, பீட்ரூட் ரூ. 100-110, கத்தரிக்காய் ரூ.150-160, கோவா ரூ. 25-35, கறிமிளகாய் ரூ.350-650, கரட் ரூ. 80-160, வெள்ளரி ரூ.130-140, பச்சை மிளகாய் ரூ.180-200, நோகோல் ரூ.120-190, லீக்ஸ் ரூ.170-180, உருளைக்கிழங்கு (வெலிமடை) ரூ. 220-230, முள்ளங்கி ரூ.25-30, பூசணி (மலேசியன்) ரூ. 70-80, தக்காளி ரூ.140-160.

Comments