மட்டக்களப்பில் டெங்கு நோய் விழிப்பூட்டல் தொடர்பான செயலமர்வு.......

 மட்டக்களப்பில் டெங்கு நோய் விழிப்பூட்டல் தொடர்பான செயலமர்வு.......

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேச செயலகப் பிரிவில் டெங்கு பரிசோதனை மேற்கொள்ளல் மற்றும் தற்போதைய சுற்றாடல் நிலைமைகளை ஆராய்வது தொடர்பான செயலமர்வு (13) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலாளர் யூ.உதயஸ்ரீதர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், டெங்கு களப்பயணம் மேற்கொள்ளவுள்ள கிராம சேவகர் பிரிவுகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.
அத்துடன் பொதுச்சுகாதார பரிசோதகர்களின் பங்களிப்புடன் வீடு வீடாகச் சென்று கண்காணிக்கவுள்ள டெங்கு களப்பயணத்தில் அனைத்து உத்தியோகத்தர்களும் இன்று (14) முதல் கலந்துகொள்ளுமாறு பிரதேச செயலாளர் கோரிக்கை விடுத்தார்.
காத்தான்குடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம். நஸீர்தீனின் மேற்பார்வையில் இச்செயற்திட்டம் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது, பிரதேசத்தின் 18 கிராம பிரிவுகளின் கிராமசேவை அலுவலர்கள், அபிவிருத்தி மற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.




Comments