“சிங்கள எழுத்துக்கள்”- “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு........

 “சிங்கள எழுத்துக்கள்”- “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய நூல்கள் ஜனாதிபதியிடம் கையளிப்பு........

அரச கரும மொழிகள் திணைக்களத்தினால் தொகுக்கப்பட்ட “சிங்கள எழுத்துக்கள்” மற்றும் “தமிழ் எழுத்துக்கள்” ஆகிய இரண்டு நூல்கள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களிடம் கையளிக்கும் நிகழ்வு (21) முற்பகல் பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றது.
பெப்ரவரி 21ஆம் திகதி சர்வதேச தாய்மொழி தினத்தை முன்னிட்டு பிரதமர் தினேஷ் குணவர்தனவினால் இந்த நூல்கள் ஜனாதிபதிக்கு வழங்கி வைக்கப்பட்டன.
சபாநாயகர் உட்பட அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இந்த நூல்களை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனும் கலந்து கொண்டார்.

Comments