மட்/முனைக்காடு விவேகானந்தா பாடசாலைக்கு மேசைபந்தாட்ட உபகரணம் கையளிப்பு.....
மட்/மமே/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்திற்கு முனைக்காடு சமூக ஆர்வலர் ந.தனபாலன் அவர்களால் மேசைப்பந்தாட்ட மேசை (17) அன்று வழங்கி வைக்கப்பட்டது.
மட்/மமே/முனைக்காடு விவேகானந்த மகா வித்தியாலயத்தில் மேசைப்பந்தாட்ட விளையாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் மேசைப்பந்தாட்ட ஆடுகளத்தை கொள்வனவு செய்து தருமாறு பாடசாலை சமூகம் முனைக்காடு கிராமத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ந.தனபாலன் அவர்களிடம் விடுத்த வேண்டுகோளை தொடர்ந்து தனது சொந்த நிதியிலிருந்து 2 இலட்சம் ரூபாய் பெறுமதியான மேசைபந்தாட்ட விளையாட்டுக்கான மேசையினை கொள்வனவு செய்து பாடசாலை சமூகத்திடம் கையளிக்கும் நிகழ்வு (17)ம் திகதி வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பாடசைலை சமூகம் சார்ந்தோர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
Comments
Post a Comment