பெண்கள் உதைபந்தாட்ட போட்டியில் மட்/ககு/கட்டுமுறிவுக்குளம் சாம்பியனாக தெரிவு.....
திருகோணமலை பாடசாலைகள் உதைபந்தாட்ட அபிவிருத்தி ஒன்றியத்தினால் -TSSDA (11) நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான பெண்களுக்கான உதைப்பந்தாட்ட போட்டியில் மட்/ககு/கட்டுமுறிவுக்குளம் அ.த.க.பாடசாலை போட்டியில் வெற்றி பெற்று சாம்பியனாக தெரிவாகி உள்ளது.
இப்போட்டியின் போது தி/மூ/இலங்கைத்துறை முகத்துவாரம் இந்துக்கல்லூரியுடனான போட்டியில் (8.0) என்ற கோள்கள் அடிப்படையிலும் தி/மூ/கலைமகள் இந்துக்கல்லூரி பள்ளிக்குடியிருப்புடனான போட்டியில் (7.0) கோள்கள் அடிப்படையிலும் தி/தி/மரியாள் கல்லூரி திருகோணமலையுடனான போட்டியில் (4.1) கோள்கள் அடிப்படையில் வெற்றி பெற்று சம்பினானது.
பெண்களுக்கான உதைப்பந்தாட்டத்தினை மேம்படுத்தி ஊக்கப்படுத்தும் நோக்கோடே TSSDA நடாத்தியதற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். பெண்கள் உதைபந்தாட்டத்தை மேம்படுத்த சகரும் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என தெரிவிப்பதுடன் மட்/ககு/கட்டுமுறிவுக்குளம் அ.த.க. பாடசாலைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.
Comments
Post a Comment