தபால் மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் இடம்பெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு.....

 தபால் மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் இடம்பெறும் – தேர்தல்கள் ஆணைக்குழு.....

தபால் மூல வாக்களிப்பு திகதி பிற்போடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் பிரசாரம் முற்றிலும் பொய்யானது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

திட்டமிட்டபடி 22-23-24ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு நடைபெறும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



தபால் மூல வாக்குச் சீட்டுகளை விநியோகிக்கும் திகதி மாத்திரமே தாமதமாகியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைக்கப்பட்டதாக ஆணைக்குழுவில் எவரும் அறிவிக்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

Comments