பாடசாலை சாரண தலைவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான ஒன்றுகூடல்.......

 பாடசாலை சாரண தலைவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான ஒன்றுகூடல்.......

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலக ஏற்பாட்டில் பாடசாலை சாரண தலைவர்களுக்கும் ஆசிரியர்களுக்குமான ஒன்றுகூடல் நிகழ்வு வலயக்கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் பிரதிக்கல்விப் பணிப்பாளர் ச.ரவிராஜ் தலைமையில் (14) இடம் பெற்றது.
இதன் போது காங்கேசன்துறை மாவட்ட சாரண ஆணையாளர் ஜெயபவன் மற்றும் அவரது குழுவினரும் வவுணதீவு பன்சேனையில் கலந்துரையாடலில் பங்கேற்றனர்.
இதன் போது மட்டக்களப்பு மற்றும் காங்கேசன்துறை என்பவற்றின் சாரண ஆணையாளர்கள் நினைவுச் சின்னங்களை பரிமாறிக் கொண்டனர்.
ஒவ்வொரு மாதமும் இவ்வாறான மீளாய்வு ஒன்றுகூடல்கள் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் உடற்கல்விக்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் லவக்குமார், மட்டக்களப்பு மாவட்ட சாரண ஆணையாளர் வி.பிரதீபன் மற்றும் உதவி மாவட்ட ஆணையாளர்களான ஆ.உதயகுமார் (பயிற்சி), ஆ.புட்கரன் (ஊடகம்), சி. தமிழ்ச்செல்வன் (குருளை), சி.பிரஷாத் (பெண்கள் சாரணியம்) ஆகியேருடன் வலயத்தின் சாரண தலைவர்களும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.



Comments