பொது மக்களுக்கு நிவாரணம் – ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அனுமதி......
பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்கமைய 20 இலட்சம் ஏழைக்குடும்பங்களுங்கு தலா 10 கிலோகிராம் அரிசியினை பெற்றுக்கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களிலேயே இவ்வாறு நிவாரணம் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் அரச சேவையிலிருந்து ஓய்வு பெற்ற 18 ஆயிரம் பேருக்கு நிலுவையிலுள்ள ஓய்வூதியத் தொகையை கட்டம் கட்டமாக வழங்கவும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment